இந்தியாவைத் தொடர்ந்து சீனா மற்றும் ஜப்பானிடம் நிதி உதவி பெறும் முனைப்புக்களில் அரசாங்கம்
இந்தியாவைத் தொடர்ந்து சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடம் நிதி உதவி பெற்றுக் கொள்ளும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக அண்மையில் இந்தியாவிடம் கோரப்பட்ட போது, சீனா மற்றும் ஜப்பானிடமும் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
சீனா மற்றும் ஜப்பானிடம் நிதி உதவி கோரும் யோசனைத் திட்டமொன்று அண்மையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடனில் 20 வீதமான தொகை சீனா மற்றும் ஜப்பானுக்கு செலுத்த வேண்டியது என்பதனால், இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டை போன்று இந்த இரண்டு நாடுகளுடனும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென நிதி அமைச்சு யோசனை முன்வைத்துள்ளது.
சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான இறக்குமதி வர்த்தகம், ஏற்றுமதி வர்த்தகத்தை விடவும் அதிகம் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே இந்த நாடுகளிடமிருந்து வர்த்தக ரீதியான சலுகைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கோட்டாபய அரசாங்கம் பெற்றுக்கொண்ட பெருந்தொகையான கடன்! வெளியானது பட்டியல்(Photo)
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri