இலங்கையில் வீடுகளை கட்டுவதற்கு அதிக மானியங்களை வழங்கும் இந்தியா
அனுராதபுரத்தில் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பதற்காக 150 மில்லியனுக்கும் கூடுதல் மானியத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான மானியம் குறித்த கடிதங்களை கடந்த மார்ச் 21ஆம் திகதியன்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அது தொடர்புடைய இலங்கை அதிகாரிகள் பரிமாறிக்கொண்டனர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயமானது, "அநுராதபுரம் சோபித தேரர் கிராமத்தில் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் மொத்த அர்ப்பணிப்பு 450 மில்லியன் ரூபாவாகும்.
இலங்கையின் பொருளாதார நிலை
காலஞ்சென்ற சோபித தேரர் இலங்கையின் நல்லாட்சி இயக்கத்தில் ஒரு முக்கிய பௌத்த பிக்கு ஆவார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில், இந்த திட்டங்களை விரைவாக நிறைவேற்ற தற்போதைய ஒன்பது மானிய திட்டங்களுக்கு கூடுதல் நிதியை செலுத்த இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வின் தாக்கத்தை குறைப்பதே இத்திட்டங்களின் அசல் நோக்கம்.
மேலும், ஒன்பது திட்டங்களில் ஒவ்வொரு திட்டத்திலும் இந்திய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் 50% வரை கூடுதல் நிதிகளின் அளவு உள்ளது” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
