இலங்கை வந்தடையவுள்ள இந்திய எரிபொருள் கப்பல் : வெளியான முக்கிய அறிவிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் 38,000 மெட்ரிக் டன் எரிபொருள் கப்பல் நாளை (28) இலங்கையை வந்தடையவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பிலான அறிவிப்பு இன்று(27.03.2026) வெளியாகியுள்ளது.
நாளை வரும் சரக்கு கப்பல்
மேலும் தெரியவருவதாவது,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள் கப்பல் ஒன்று கிடைக்கவுள்ளது.

20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய இந்தக் கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இலங்கையின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மற்றுமொரு கட்டமாக இந்த எரிபொருள் கையிருப்பு அமைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam