உலகளாவிய எரிபொருள் நெருக்கடி : அவுஸ்திரேலியாவில் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்கள்
உலகளாவிய எரிபொருள் நெருக்கடியின் காரணமாக அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அங்குள்ள பல எரிபொருள் நிலையங்களில் இருப்பு தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள்
மோதல் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன.
மேலும் மக்கள் அதிகளவு எரிபொருளை வாங்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையையடுத்து, குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் இருந்து எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்களின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan