அமெரிக்க டொலரில் டொனால்ட் ட்ரம்ப் கையொப்பம்: 165 வருட வரலாற்றை மாற்றிய அதிரடி உத்தரவு
அமெரிக்காவின் நாணயத்தாள்களில் (Currency) இனி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கையொப்பம் இடம்பெறும் என்று அந்நாட்டு திறைசேரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், கடந்த 165 ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த அமெரிக்கப் பாரம்பரியம் ஒன்று முடிவுக்கு வந்துள்ளது.
வழக்கமாக, அமெரிக்கப் நாணயத்தாள்களில் திறைசேரி செயலர் (Treasury Secretary) மற்றும் அமெரிக்கப் பொருளாளர் (Treasurer) ஆகியோரின் கையொப்பங்கள் மட்டுமே இடம்பெறுவது வழக்கம்.
விமர்சனங்கள்
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின்படி, ஒரு ஜனாதிபதி தனது கையொப்பத்தைப் நாணயத்தாள்களில் இடுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த அதிரடி முடிவானது போர்ச் சூழல் மற்றும் சர்வதேச பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது.
தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் வலிமையாக இருப்பதை வெளிப்படுத்தும் அடையாளமாகவே ட்ரம்ப் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

புதிய 20 டொலர் மற்றும் 100 டொலர் நாணயத்தாள்களில் முதலில் இந்த மாற்றம் அமுல்படுத்தப்படும் என்றும், படிப்படியாக மற்ற பணத்தாள்களிலும் இது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் குறித்து அமெரிக்க மக்களிடையே ஆதரவும், அதே சமயம் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri