இந்திய கடற்தொழிலாளர்கள் 08 பேர் பிணையில் விடுதலை : அரசுடைமையாக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்கள்
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட 08 இந்திய கடற்தொழிலாளர்களுக்கும் ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒருவருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 27ம் திகதி எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 08 இந்திய கடற்தொழிலாளர்களை கைது செய்ததுடன், அவர்களின் படகுகளையும் கைப்பற்றிய கடற்படையினர் குறித்த 8 இந்திய கடற்தொழிலாளர்களையும், அவர்களின் படகுகளையும் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்.
இன்றைய தினம் 08 இந்திய கடற்தொழிலாளர்களும் நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அத்துடன், குற்றச்சாட்டு பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இந்திய மீனவர்கள் 08 பேருக்கும் தலா ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒரு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் நாணயங்கள் விடுவிக்கப்பட்டதுடன் படகு வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
குறித்த வழக்கில் இந்திய கடற்தொழிலாளர்கள் சார்பாக இந்தியத் துணைத் தூதரக அதிகாரி முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
