சாதனை படைத்த ரோகித் சர்மா: இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா
இந்தியா(India)- இங்கிலாந்து(England) அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று(9) கட்டாக்கில் நடைபெற்றது.
இங்கிலாந்து அணி
இந்தப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ஓட்டங்களும் பெண் டக்கெட் 65 ஓட்டங்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் மற்றும் கில் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர்.
நிதானமாக விளையாடிய கில் 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரோகித் அதிரடியாக விளையாடி 76 பந்துகளில் சதமடித்தார். 119 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் ரோகித் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 44.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ஓட்டங்கள் அடித்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் அணித்தலைவர் ரோகித் 3ஆவது இடம் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 48 சதங்கள் அடித்துள்ள டிராவிட்டின் சாதனையை முறியடித்து 49 ஆவது சதத்தை ரோகித் இன்று பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்தவுக்கு தமிழ் தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும்...! 11 மணி நேரம் முன்

Baakiyalakshmi: இனியாவிற்கு திடீர் திருமண ஏற்பாடு... திகைப்பில் பாக்கியா! ஆனால் நடந்த டுவிஸ்ட் Manithan

சோவியத் கால எண்ணெய் குழாயை பயன்படுத்த திட்டம்., அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி பேச்சுவார்த்தை News Lankasri
