20க்கு20 கிரிக்கட் தர வரிசையில் இந்திய அணிக்கு மீண்டும் முதலிடம்! (வீடியோ)
20க்கு 20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசையில் இந்திய அணி 6 ஆண்டுக்கு பின்னர் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி 20க்கு 20; கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்றநிலையில் இந்த முன்னேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
?
— ICC (@ICC) December 6, 2021
India are back to the No.1 spot in the @MRFWorldwide ICC Men’s Test Team Rankings.#INDvNZ pic.twitter.com/TjI5W7eWmq
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
முன்னதாக மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்தியா 3-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.
இந்தநிலையில், சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் வெளியிட்டுள்ள 20க்கு20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இதன்படி 269 தரப்புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணியை முந்தி இந்தியா முதலிடத்தை பிடித்தது.
ஏற்கனவே 2016 பெப்ரவரி 12 முதல் மே 3 வரை மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி 20க்கு 20 போட்டி தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.



