இலங்கையில் சீனாவின் அதியுயர் தொழில்நுட்பம் - இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என எச்சரிக்கை
இலங்கையில் சீனாவின் அதியுயர் தொழில்நுட்ப உபகரணங்களை நிலைநிறுத்துவது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழக புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீவிர பாதுகாப்பு
இலங்கையில் இராணுவ பயிற்சி பெற்ற சீன பிரஜைகள் அதிக காலம் தங்கியிருப்பது குறித்து தமிழகம் தீவிர பாதுகாப்பு கவலைகளை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் சீன பிரஜைகளின் செயல்பாடுகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், எனவே கடற்கரையை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக உளவுத்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரித்துள்ளது.
அதிநவீன தொழில்நுட்பம்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சீனப் பிரஜைகள் குவிக்கப்பட்டுள்ளதாலும், அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்துவதாலும் தமிழக கடலோர மாவட்டங்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடல் அட்டை வளர்ப்பு என்ற போர்வையில் சீன மக்கள் விடுதலை இராணுவம் அதிநவீன உபகரணங்களை இலங்கையில் நிலைநிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.