அணுவாயுதத்தை காட்டி இந்தியாவை பயமுறுத்த முடியாது : ரஷ்யாவில் கனிமொழி
அணு ஆயுதத்தை காட்டி பாகிஸ்தான், இந்தியாவை பயமுறுத்த முடியாது என்று திராவிட முன்னேற்றக்கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி(Kanimozhi) கூறியுள்ளார்.
சிந்தூர் தாக்குதல் நடவடிக்கையில் இந்தியா தரப்பு நியாயத்தை, எடுத்து சொல்ல மத்திய அரசு தூதுக்குழுவை சர்வதேச நாடுகளுக்கு அனுப்பியுள்ளது.
பாகிஸ்தானுக்கும் தொடர்பு
இந்தநிலையில், ரஷ்யாவில் செய்தியாளர்களை கனிமொழி தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர்.
இதன்போது, இந்தியா அமைதி பக்கம் நிற்பதாகவும், நேர்மைக்காக இந்தியா தொடர்ந்து போராடும் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.
இதேவேளை செய்தியாளர்களிடம் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம் சந்த் குப்தா, உலகில் இடம்பெறும் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையை எடுத்துக்கொண்டால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, பாகிஸ்தானுக்கு அவற்றுடன் சில தொடர்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |