இலங்கையை இந்தியா உலக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியும்

world court
By Independent Writer Mar 03, 2021 10:36 AM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

இலங்கை தீவின் சுதந்திரத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுகள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஏற்க தவறிய காரணத்தினால், தமிழ் மக்கள் 35 வருடகாலமாக ஓர் அகிம்சை போராட்டத்தை நடத்த வேண்டி ஏற்பட்டது.

இப்போராட்டத்தை இலங்கைவின் பாதுகாப்பு படைகள் தொடர்ச்சியாக வன்முறை மூலமாக நசுக்கிய காரணத்தினால் அது ஓர் ஆயுதப் போராட்டமாக வெடித்து, தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் ஓர் மரபு முறை யுத்தமாக மாறியுள்ளது.

இலங்கை தீவின் அரசியல் யாதார்த்த நிலைகளை ஓருவர் எந்தவித பாரபட்சம் அற்ற நிலையில் ஆராய்வாரேயானால், அங்கு எப்பொழும் எண்ணிக்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு சார்பான முடிவுகளையே, இன்றுவரை நாடாளுமன்றமும், முன்பு சட்ட (செனற்) சபையும் நிறைவேற்றியுள்ளதை நாம் காணாலாம்.

அத்துடன் இத்தீவில் தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட ஐந்து இனக் காலவரங்களும், ஓர் தமிழ் இன அழிப்பு நடைபெறுவதை ஆதாரபுரமாக காட்டியுள்ளது.

அவ்வேளையில் நடைபெற்ற ஐந்து இனக் கலவரங்களிலும் ஒரு போதும் தங்களை தாக்கிய சிங்கள கடையாளர்களை, தமிழ் மக்கள் எதிர்த்து தாக்கியாது என்பது வாராலாற்றில் கிடையாது.

இவ் இனக் காலவரங்கள் அரச படைகளின் உதவியுடனும், சிங்கள அரசியல் வாதிகளின் ஏவுதலின் பின்னணியில் ஏற்பட்டது என்பது யாதர்த்தமான உண்மை.

ஏது எப்படியாயினும், இலங்கைவினுடையா தமிழ் இன அழிப்பு ஓர் அளவு வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது என்பதை பின்வரும் புள்ளி விபரங்கள் ஆதாரத்துடன் காட்டுகின்றன.

இன்று மேற்கு நாடுகளில் 500,000 மேற்பட்ட தமிழ் அகதிகளும், அயல் நாடானா இந்தியாவில் ஏறக்குறைய 153,000 இலங்கை தமிழ் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர். (இந்தியாவல் 103,000 பேர் வரை வேறுபட்ட அகதி முகம்களிலும், 50,000 பேர் வரை அகதி முகம்களுக்கு வெளியிலும் உறவினருடனும் வாழுகின்றனர்).

அத்துடன் உள்நாட்டில் 500,000 க்கு மேற்பட்டோர் இடம் பெயர்ந்து முகம்களில் வாழுகின்றனர்.

வெளி உலகம் அறியாத உண்மை

இத்தீவில் இடம் பெற்ற குறைந்தது ஐந்து இனக் காலவரங்களிலும், சிங்கள கடையாளர்களினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், அவர்களது கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டன.

இவ் வேளையில், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்ந்த தமிழ் மக்கள் பாதுகாப்புக்காக உடனடியாக அவர்களது பூர்வீக நிலமான வடக்கு கிழக்குக்கே அனுப்பப்பட்டார்கள்.

ஆனால் இலங்கை அரசின் தமிழ் இன அழிப்புக்கு வடக்கு கிழக்கு விதி விலக்காக இருக்கவில்லை. அங்கும் சிங்கள குடிறேற்றங்கள் நடைபெறுவதுடன், எல்லைப்புறங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் சிங்கள கடையாளர்களினாலும், எல்லைப் படைகளினாலும் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.

தமிழ் மக்களின் தற்பாதுகப்பு நடவடிக்கையும், எதிர்தாக்குதலும்

ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சில இழப்புக்கள் உள்ளன என்பது உண்மை. ஆனால் முன்பு நடைபெற்ற ஐந்து இனக் கலவரங்களுடனும் ஒத்து பார்க்கும் பொழுது, இங்கு இழப்புக்கள் இருந்தாலும், தமிழ் மக்களுக்கென ஓர் அரசு, சரியான கட்மைப்புகளுடன் உருவாகியுள்ளதை வெளிப்படையாக காணக் கூடியதாகவுள்ளது.

1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், தனி அரசுக்கான ஆணையை பெரும்பான்மை வாக்குகாளால் கொடுத்திருந்த போதிலும், இதை இலங்கை அரசு விசமத்தனமாக அலட்சியம் செய்தது என்பது வரலாறு.

இலங்கை மீதான ஆட்சேபம்

அண்மைகாலத்தில், விசேடமாக ஜனதிபதி ராஜபக்சா பதவியேற்ற காலத்திலிருந்து, இலங்கைவின் சர்வதிகாரத்துடனான தமிழ் இன அழிப்பு போக்கை அவதானித்த சர்வதேச சமூதாயம், இலங்கை மீது தனது கவனத்தை திருப்ப தொடங்கியது.

உதாரணத்திற்கு, கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில், ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் - ஏழு நாடுகள் உட்பட, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரும் மற்றும் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இலங்கை மீதான தமது ஆட்சேபத்தை ஏழுப்பியிருந்தன.

சர்வதேச சமூதயத்தின் கவனம் இலங்கை மீது திருப்பப்பட்டுள்ளதை அவதானித்த இலங்கையின் கொள்கை வாகுப்பாளர்கள், தமது தமிழ் இன அழிப்பின் அணுகு முறையின் யுக்திகளை மாற்ற ஆரம்பித்தனர்.

இதன் பிரகாரம், இலங்கை தீவின் அரச நிர்வாக விடயத்தில் - தமிழ் தேசியமும், தமிழ் மக்களின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கும் அங்கீகாரம் பெறுவதை நிறுத்துவதற்காக, இலங்கைவின் நீதி மன்றங்களில் வழங்குகளை தொடுத்து அவற்றின் அங்கீகாரத்தை இல்லாது ஒழிக்க திட்டமிட்டனர்.

இந்த அடிப்படையில், வழக்குகளை சிறிலங்கவின் உச்ச நீதி மன்றத்தில் தொடர்வதற்காக பல சிங்கள அரசியல் கட்சிகளும், வழங்கறிஞர்களும் தயாராக்கப்பட்டனர்.

இன அடிப்படையில் தீர்ப்புக்கள்

இந்த அடிப்படையில் இலங்கைவின் உச்ச நீதிமன்றம், அரசின் கொள்கைகளை பிரதிபலித்து, தீர்ப்புக்களை இன அடிப்படையில் வழங்கும் ஒரு நாடாக கொட்டகையாக மாற்றப்பட்டது.

அத்துடன் இவ் உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சர்ச்சைக்குரிய விடயங்களை விசாரிப்பதற்கு, இன விகித சாரத்தை மனதில் கொள்ளது, சிங்களவரை மட்டுமே நீதிபதிகளாக நியமித்தார்கள்.

திருகோணமலையில், 2005ம் ஆண்டு சட்ட விரோதமாக சிங்களவரால் நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பான தீர்ப்பும், அத்துடன் சுனாமியினால் பதிக்கப்பட்தோருக்கான நிவராணம் மற்றும் புனநிர்மாண ஓப்பந்தம் பற்றிய தீர்ப்பும், இலங்கைவின் சட்டத்துறை பக்கச் சார்பானது என்பதை நிரூபித்த அதே வேளை, இலங்கைவில் தமிழ் மக்களுக்கு எந்த விடயத்திலும் நீதி கிடைக்கப் போவது இல்லை என்பதையும் தெட்டத் தெளிவாக உணர்த்தியது.

இவ் இரு தீர்புகளையும் வெற்றிகரமாக மேடையேற்றிய இலங்கைவின் சட்டத்துறை, அடுத்தபடியாக தமிழ் மக்களின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கு மாகாணங்களை இரு வேறு மாகாணங்களாக பிரிப்பட வேண்டுமென்ற வழக்கை தாக்கல் செய்வதற்கு தயார் ஆகினார்கள்.

இலங்கை - இந்தியா சர்வதேச உடன்படிக்கை

தமிழ் மக்களின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கில், தமிழ் மக்கள் பல ஆயிரம் ஆண்டு காலமாக பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன், 1987ம் ஆண்டு யூலை 29ம் திகதி கையெழுத்தான இலங்கை - இந்தியா சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கைவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதியினால், 1988ம் ஆண்டு செம்டம்பர் 8ம் திகதி, இவ் இரு மாகாணங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.

இலங்கைவின் அரசியல் யாப்பை பொறுத்தவரையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதியினால் எடுக்கப்படும் முடிவுகளுக்கும், நடைமுறைப்படுத்தப்படும் தீர்மானங்களுக்கும், நாடாளுமன்றத்தின் ஆதரவோ அல்லது வேறு ஏதாவது அதி உயர் மட்டத்தின் ஒத்தசையோ தேவையில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு பதினெட்டு வருட காலத்தின் பின்னர், விசேடமாக ஜனதிபதி மகிந்த ராஜபக்சா பதவிக்கு வந்த பின்னர், இவ் வழக்கை சிங்கள நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலனைக்கு ஏடுப்பதற்கான தயாரிப்புக்களை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், ஏற்கனவே சுனாமி ஓப்பந்தத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து வெற்றி கண்ட அதே விண்ணப்பக்காரர்களினால், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரு வேறு மாகாணங்களாக பிரிப்பட வேண்டும் என்ற வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்து.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிப்பட்டன

இதன் பிரகாரம் உச்ச நீதி மன்றம் தனது அரசியல் முடிவை, தீர்ப்பு என்ற போர்வையில் - கடந்த ஆண்டு ஓக்டொபர் 16ம் திகதி வழங்கியது. முன்னைய ஜனதிபதியினால், வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டது செல்லுபடியாகாது தனது தீர்ப்பில் கூறியது.

இவ் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை அறிந்த சர்வதேச சமுதாயமும், இந்தியாவும் மிகவும் அதிருப்தி அடைந்தன. இதே வேளை சில சிங்கள அரசியல் வாதிகளும், ஒரு சில அமைச்சர்களும் வழமை போல் தமது அதிருப்தியை தெரிவித்தனர்.

உண்மையில், இது சர்வதேச சமுதாயத்தின் அதிருப்தியை சமாளிப்பதற்கா சிங்கள அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திரம் என்பது தான் உண்மை.

இலங்கை - இந்தியா ஒப்பந்தம் பல எதிர்ப்புக்களை சந்தித்த போதிலும், அவ் உடன்படிக்கையில் உள்ள சில நிபந்தனைகள் - பலவிதப்பட்ட இரத்த களரிகள், உயிர் இழப்புக்கள் மத்தியில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளன.

இவ் நிலையில், சட்டங்களை மனதில் கொள்ளாத சிங்கள நீதிபதிகளினால், ஒரு தலை பக்கச் சார்பாக கொடுக்கப்பட்ட உச்ச நீதி மன்றத்தின் அரசியல் தீர்ப்பை ஏற்று, வடக்கு கிழக்கு மாகாணங்களை இரண்டாக பிரிக்க முடியுமா?

புலிகளின் ஆயுதங்கள் - கச்சதீவு உடன்படிக்கை

இவ் உச்ச நீதி மன்றத்தின் அரசியல் தீர்ப்பை சிங்கள மக்களும், இலங்கைவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதியும் ஏற்பார்களெயானால், இந்தியாவில் உள்ள ஓர் அரசியல் கட்சி, தற்செயலாக இந்தியாவின் நீதி மன்றத்தில் இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தின் பிரகாரம், தமிழிழ விடுதலை புலிகளினால் கையழிக்கப்பட்ட ஆயுதங்கள் யாவற்றையும், இந்தியா அரசு திரும்ப பெற்று கொடுக்க வேண்டுமென வழக்கு தொடுத்தால் என்னவாகும்?

இதேபோல் இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தில், இன்னுமொர் அரசியல் கட்சி, 1974ம் ஆண்டு திருமதி இந்திரா காந்தியினால் கையெழுத்திடப்பட்ட “கச்சதீவு” உடன்படிக்கை செல்லுபடியாகது எனவும், “கச்சதீவை” இலங்கை உடனடியாக திருப்பி இந்தியாவிடம் கையாளிக்க வேண்டுமென வழக்கு தொடுத்தால் என்னவாவது?

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் உள்ள தீவான “கச்சதீவு”, திருமதி இந்திரா காந்தியின் காலத்தில் ஓர் உடன்படிக்கை மூலம், இலங்கைவிடம் கையழிக்கப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டு மக்கள் இவ் விவகாரத்தை என்றும் விரும்பவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியா முறையீடு செய்ய முன்வர வேண்டும்

இப்படியான பல வித நடைமுறை காரணங்களினால், இந்து சமூத்திரப் பிராந்தியத்தில் சர்வதேச சமாதானத்திற்கும், பாதுகாப்புக்கும் அபாயம் ஏற்படக் கூடிய சாத்வீகக்கூறுகள் உண்டு.

இந்த அடிப்படையில், இலங்கைவினால் தற்பொழுது மீறப்பட்டுள்ள இலங்கை - இந்தியா சர்வதேச ஒப்பந்தம் பற்றிய விவகாரத்தை, இந்தியாவினால் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு - ஐ. நா சபையின் அதிகாரப்பத்திரத்தின், ஆறாவது அதிகாரத்தின், சாரம் 34, 35, 36 க்கு அமைய, முறையீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு.

இப்படியாக இந்தியா அரசாங்கம் முறையீடு செய்ய முன்வரும் வேளையில், இவ் விவகாரம் - தேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஐ. நா. பாதுகாப்பு சபையினால் முன் வைக்கப்படலாம். இவ் நீதி மன்றத்தையே உலக நீதி மன்றம் எனவும் கூறுவார்கள்.

உலகத்தில் நீதியையும், சர்வதேச சமாதானத்தையம், பாதுகாப்பையும் விரும்பும் ஒவ்வொரு பிராஜைகளும், இந்தியா அரசிடம் இவ் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் முறையீடு செய்யுமாறு வேண்டுகோள் செய்ய வேண்டும்.

இலங்கையின் நீதித்துறை கபடமாகவும், ஒரு தலை பட்சமாகவும், முழுக்க அரசியல் தீர்வுகளை நடைமுறைப்படுத்தும் ஓர் நாடாக கொட்டகையாக மாறியுள்ள காரணத்தினால், இவர்களினால் அடுத்த படியாக தொடரக்கூடிய வழக்கு எதுவாக இருக்குமென ஊகிக்கும் பட்சத்தில், அது நிட்சயமாக, “இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கு எந்தவித சலுகைகளோ, உரிமைகளோ, குடி உரிமையோ கிடையாது” என்பதாகவே இருக்கும்.

இப்படியாக வழக்கு தொடரப்படும் வேளையில் விண்ணப்பக்காரர்களுக்கு சார்பான தீர்ப்பையே இலங்கைவின் உச்ச நீதி மன்றம் வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

குறிப்பு - 2007ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட இந்த கட்டுரையானது காலத்தின் தேவை கருதி மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.V Kirubaharan அவர்களால் வழங்கப்பட்டு 03 Mar 2021 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.V Kirubaharan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
மரண அறிவித்தல்

Narantanai, நீர்கொழும்பு

17 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US