இந்தியாவில் நேர்ந்துள்ள மற்றுமொரு பயங்கர அனர்த்தம்: பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்
இந்தியா-மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் உள்ள இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவமானது பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் இன்று(15) மாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கும் பணிகள்
குறித்த பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரைக்கு வந்தடைந்தடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நபரொருவர் உயிரிழந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஆற்றில் விழுந்த மற்றையவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
You may like this..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |