பங்களாதேஸ் அணியை தோற்கடித்து வெற்றியை கைப்பற்றிய இந்திய அணி
இந்திய அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி இன்றைய நான்காவது நாளின்போது 280 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 376 ஓட்டங்களை பெற்றது.
இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதனையடுத்து துடுப்பாடிய பங்களாதேஸ் அணி தமது முதல் இன்னிங்ஸில் 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
280 ஓட்டங்களால் தோல்வி
இதனையடுத்து, தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 287 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதில் சுப்மன் கில் 119 ஓட்டங்களையும், ரிசப் பன்ட் 109 ஓட்டங்களையும் பெற்றனர்.
எனினும், தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி, 234 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தநிலையில், 280 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
