பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா வலுவான நிலையில்!
பங்களாதேஷ் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின்போது, பங்களாதேஷ் அணி, வெற்றி பெற 357 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில், தமது இரண்டாம் இன்னிங்ஸில் 4 விக்கட்டுகளை இழந்திருந்தது.
இரண்டாம் இன்னிங்ஸ்
முன்னதாக இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 376 ஓட்டங்களை பெற்ற நிலையில், இரண்டாம் இன்னிங்ஸில் 4 விக்கட் இழப்புக்கு 287 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
பங்களாதேஷ் அணி தமது முதல் இன்னிங்ஸில் 149 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் சுப்மான் கில் ஆட்டமிழக்காது 119 ஓட்டங்களையும், ரிசப் பண்ட் 109 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பங்களாதேஷ் அணியில் முதல் இன்னிங்ஸில் நஜிமுல் ஹொசைன் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
