ஈரானுக்கான வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் கட்டுப்பாடுகளை அறிவித்த இந்தியா
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடையே ஏவுகணை தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுக்கான வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மேலும், குறித்த நாடுகளில் உள்ள இந்திய குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, உதவிக்கு தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Our response to media queries on the situation in Sudan:https://t.co/vzHvvFoWrV pic.twitter.com/qFN91TEgDs
— Randhir Jaiswal (@MEAIndia) October 2, 2024
பிராந்தியத்தின் நிலைமை
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமையையும், பாதுகாப்பு நிலைமையின் தீவிரத்தையும் இந்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து இந்திய குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வெளியே செல்லாமல் பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்க வேண்டும்." ஜெய்ஸ்வாலினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |