”இலங்கைக்கு பெற்றோலியப் பொருட்கள்”- 500 மில்லியன் டொலர் கடன் அறிவிப்பை வெளியிட்ட இந்தியா!
பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு, இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான அறிவிப்பை இந்திய மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிடமிருந்து பெற்றோலியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) 2022 பெப்ரவரி 02 அன்று உடன்படிக்கையை செய்து கொண்டது.
இந்த உடன்பாட்டின் கீழ், எக்ஸிம் வங்கியின் மொத்தக் கடனில், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்புள்ள பொருட்கள், பணிகள் மற்றும் சேவைகள் இந்தியாவிலிருந்து விற்பனையாளரால் வழங்கப்பட வேண்டும்.
மீதமுள்ள 25 சதவீத பொருட்கள் மற்றும் சேவைகள் இந்தியாவிற்கு வெளியே இருந்து தகுதியான விற்பனையாளரால் வழங்கப்படலாம்.
இந்தநிலையில் 2020 பெப்ரவரி 18-ம் திகதி முதல் இந்த உடன்படிக்கை அமுலுக்கு வருவதாக இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
