இந்தியாவும் கட்டாரும் கப்பலை நிராகரிக்கவில்லை – பர்ள் கப்பல் நிறுவனம்
இந்தியாவும் கட்டாரும் கப்பலை நிராகரிக்கவில்லை என எம்.வீ. எக்ஸ்பிரஸ் பர்ள் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எக்பிரஸ் பீடர் என்னும் கப்பல் நிறுவனமே இவ்வாறு குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு முன்னதாக இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிடம் குறித்த கப்பல் நங்கூரமிடுவதற்கு கோரிய போது அந்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கப்பல்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிடும் உலகின் முதனிலை ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும் இந்தத் தகவலில் உண்மையில்லை என கப்பல் நிறுவனமான எக்ஸ்பிரஸ் பீடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு துறைமுகங்களிலும் இந்த கப்பல் கொள்கலன்களை தரையிறக்கியதாகவும் ,நங்கூரமிடுவதற்கு அனுமதி மறுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் நைட்ரிக் அமிலம் கசியும் கொள்கலனை தரையிறக்குவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை அந்த இரண்டு துறைமுக நிர்வாகங்களும் நிராகரித்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான கொள்கலன்களை தரையிறக்கும் வசதி இல்லை என குறித்த இரண்டு துறைமுகங்களும் கூறியதாகத் தெரிவித்துள்ளது.