“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்” - சீன வெளியுறவுத்துறை அமைச்சர்
“இந்தியாவும், சீனாவும் பகையாளிகள் அல்ல கூட்டாளிகள்” என சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு கடந்த வியாழக்கிழமை (25)ஆம் திகதி சீன வெளியுறவுத் துறை அமைச்சர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இவ் விஜயம் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர்,
“இரு தரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை வரையறுக்கவோ அல்லது தடுக்கவோ அனுமதிக்கக்கூடாது.
இரண்டு நாடுகளும் ஒன்றுக்கொன்று அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்வது மற்றும் நடைமுறை சிக்கல்களை சரியான விதத்தில் கையாண்டு தீர்த்து வைப்பது போன்றவற்றில் ஒருமித்த கருத்தை கடைபிடிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன” என இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், சீன வெளியுறவுத் துறை அமைச்சரின் இவ் விஜயத்தின் போது தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆகியோரை சந்தித்து இந்திய- சீன உறவு முறை தொடர்பிலான கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam