வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்ற ஈரோஸ் தயார்..
வடக்கு கிழக்கில் மலையக மக்களை குடியேற்ற ஈரோஸ் கட்சி தயாராக உள்ளது அதேவேளை இன்று ஒரு அனர்த்தம் ஏற்பட்டதும் முன்வந்து உதவியது இந்தியா தான். எனவே இந்தியாவுக்கு எதிராக கதைப்பதற்கு எவருக்கும் அருகதை இல்லை. என ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வொயிஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் நேற்று திங்கட்கிழமை(01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மலையக மக்களின் வறுமை
இலங்கை பூராகவும் மக்களின் அவல ஓலம் கேட்கலாம் , தற்போது நல்லதொரு அரசாங்கம் இருப்பதால், உலக நாடுகள் முழுவதும் எமது நாட்டிற்காக உதவ முன்வந்துள்ளதுடன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தமது உதவிகளை முன்வந்து வழங்க ஆரம்பித்துவிட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கடந்த முறை நூடில்ஸ் வேண்டிய பணத்தை வழங்கவில்லை என்கிறார் இவருக்கு வெட்கமில்லையா இதை சொல்வதற்கு. ஈரோஸ் வடகிழக்கு உள்ளிட்ட மலையக மக்களின் வறுமையை போக்கியிருக்கின்றது.
செந்தில் தொண்டமான், ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் இந்த மலையக மக்களுக்கு எதனை செய்துள்ளார்கள். 1985 ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தை ஊடாக மலையக மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்றுக் கொடுத்தது கூட ஈரோஸ்;. இவர்கள் இந்த மக்களுக்கு ஒரு இறாத்தல் பாண் கூட பெற்றுக் கொடுக்கவில்லை.
கிழக்கு மாகாண ஆளுனராக இருந்த செந்தில் தொண்டமான் 500 கிலோ கிராம் கஜு சாப்பிட்டுள்ளார். ஒரு கிலோ 6000 ஆயிரம் ரூபாய் அப்படியானால், ஒரு வருடத்திற்கு எவ்வளவு செலவு செய்து கஜு சாப்பிட்டிருப்பார்.
தமிழ் அரசியல்வாதிகள்
இந்த பணத்தில் மலையக மக்களுக்கு பாண் வேண்டி கொடுத்திருக்கலாம். ஜனாதிபதி அனுர நல்லதொரு போராளி, நீங்களும் இந்த மலையக மக்களுக்கு துரோகம் செய்யாது. மலையக மக்கள் வாழ முடியாத இடங்களில் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் வடகிழக்கில் குடியேற்றலாம் அது தொடர்பில் அரசாங்கம் சிந்தியுங்கள்.
விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய கட்சிதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆனால் இதில் இருந்த 16 பேரும் எதை எமது மக்களுக்கு செய்துள்ளார்கள். இன்று பார்த்தால் பிள்ளையான், டக்ளஸ் செய்ததை கூட இந்த தமிழ் அரசியல்வாதிகள் எதையும் செய்யவில்லை.
அரகர போராட்டம் நடக்கும் போது நாட்டை பொறுப்பெருக்க முன்வந்தவர்கள், இன்று அனுர அரசை புடுங்க முயல்கின்றனர். நான் இன்று கூறுகின்றேன் 10 வருடங்களுக்கு இந்த அனுர அரசை யாராலும் புடுங்க முடியாது.
இந்தியா இன்று பாரிய உதவி செய்து வருகிறது. வடக்கு கிழக்கு, மலையக மக்கள் சார்பாக நன்றியை தெரிவிக்கிறோம்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam