தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய நால்வர் மீது இந்தியா குற்றச்சாட்டு
தடை செய்யப்பட்ட இலங்கை அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்புடைய நான்கு பேர் மீது இந்தியாவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் பொலிஸ் அதிகாரிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதற்காக கைது செய்யப்பட்ட ‘நீடூர்’ சாதிக் பாட்சா என்ற இகாமா சாதிக் உட்பட நான்கு பேர் மீது இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இன்று(19) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
தற்காப்புக் கலை பயிற்சியாளரான சாதிக் பாட்சா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கோவையைச் சேர்ந்த ஆர்.ஆஷிக் என்ற முகமது ஆஷிக் இலாஹி, காரைக்காலைச் சேர்ந்த முகமது இர்பான், சென்னையைச் சேர்ந்த ரஹமத்துல்லா என்ற ரஹாமத் ஆகியோர் திருவனந்தபுரம், கேரளா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் சதிக் கூட்டங்களை நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேசிய புலனாய்வு பிரிவு
ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கொய்தா மற்றும் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்டிஜே) போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளின் வரிசையில் இந்தியாவின் கிலாஃபத் கட்சி மற்றும் பிற அமைப்புகளை இணைக்கச் செய்ததாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதில்,சாதிக் பாட்சா,இஸ்லாமிய அரசு நிறுவன உறுப்பினர் என்று புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 5 பேரை மயிலாடுதுறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்கள் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
அவர்களைப் பற்றி விசாரித்த பிறகு, ஜூன் மாதம் சென்னை-புதுச்சேரியில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியபோது, ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற இஸ்லாமிய அரசு செய்திகளைக் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் தவிர குற்றஞ்சாட்டக்கூடிய ஆவணங்களுடன் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
எனினும் ஐந்தாவது பிரதிவாதியான ஜபஹர் அலிக்கு எதிராக போதிய ஆதாரங்கள்
இல்லாததால், நான்கு பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.