இந்தியாவிலிருந்து 6 மில்லியன் முட்டைகள் இறக்குமதி
இந்தியாவில் இருந்து 6 மில்லியன் முட்டைகளுடன் மற்றொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் நாளை (31.12.2023) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
முட்டை இறக்குமதி
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (04) நாடு பூராகவும் உள்ள ச.தொ.ச வர்த்தக நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலங்களில் முட்டையின் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து முட்டைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது
மேலும் அடுத்த வருட (2024) இறுதிக்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
