தலை சுற்ற வைக்கும் பச்சை மிளகாயின் இன்றைய விலை!
சந்தையில் பச்சை மிளகாய் ஒன்றின் விலை 10 முதல் 15 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ளை நகரில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் இவ்வாறு பச்சை மிளகாய் ஒன்று என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இரண்டாயிரம் ரூபாவை அடைந்தது
இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் நேற்றைய(29) நிலவரப்படி, பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 1,300 ரூபா முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தைகளில் பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 1,800 ரூபா முதல் அதிகரித்து 2,000 ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, இது பண்டிகைக் காலம் என்பதால் சந்தைகளில் பொருட்கள் கொள்வனவில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக மரக்கறி முதற்கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை அனைத்தின் விலைகளும் மிக வேகமாக அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோர் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |