சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்கள் பற்றிய விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த சின்னங்கள் பற்றிய விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சின்னங்கள்
17 சுயேட்சை வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
சரத் கீர்த்திரத்ன காற்பந்து சின்னத்திலும், கே.கே. பியதாச கணிப்பான் சின்னத்திலும், அஜந்தா டீ சொய்சா அன்னாசிப்பழம் சின்னத்திலும், ஆனந்த குலரத்ன பதக்க சின்னத்திலும், அக்மீமன தயாரத்ன தேரர் கரும்பலகை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
மேலும் சிரிப்பால அமரசிங்க டயர் சின்னத்திலும், சரத் பொன்சேகா லந்தர் சின்னத்திலும், அந்தனி விக்டர் பெரேரா மோட்டார் பைக் சின்னத்திலும், முகம்மது இலியாஸ் சிரிஞ் சின்னத்திலும், மரக்கலம்மானகே பிரமசரி மூக்கு கண்ணாடி சின்னத்திலும், அனுரா சிட்னி ஜயரட்ன பலாப்பழ சின்னத்திலும், டி.எம். பண்டாரநாயக்க மேசை மின்விசிறி சின்னத்திலும், மயில்வாகனம் திலகராஜா சிறகு சின்னத்திலும், ரோஷான் ரணசிங்க கிரிக்கெட் மட்டை சின்னத்திலும், பாக்கிய செல்வம் அரியநேத்திரன் சங்கு சின்னத்திலும், சமிந்த அநுருத்த குதிரை லாடம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
நாமலின் அரசாங்கத்தில் பிரதமர்..! சஜித்திற்கு அதிக வாய்ப்பு - ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினரது தகவல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri