சுயாதீன ஊடகவியலாளர் சனத் ரி.ஐ.டி. விசாரணைக்கு அழைப்பு (Photo)
சுயாதீன ஊடகவியலாளர் இராமச்சந்திரன் சனத் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் நுவரெலியா அலுவலகத்துக்கு எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு வருகை தருமாறு ஊடகவியலாளர் சனத்துக்கு இன்று (01.04.2023) அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்பில் வாக்குமூலம்
புஸல்லாவ பொலிஸார் ஊடாக வழங்கப்பட்டுள்ள குறித்த அறிவித்தலில், பயங்கரவாத விசாரணைப் பிரிவால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு எனக் கூறப்பட்டுள்ளது.
எனினும், என்ன விசாரணை என்பது பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
'சுடர் ஒளி' பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் நாடாளுமன்றச் செய்தியாளராகவும் செயற்பட்ட சனத் தற்போது சுயாதீன ஊடகவியலாளராகச் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
