நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிய சுயேட்சைக்குழு!
நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரத்தை இரண்டு சுயேட்சைக் குழுக்கள் ஒன்றிணைந்து கைப்பற்றிக் கொண்டுள்ளன.
நாவலப்பிட்டி நகர சபைக்கான தலைவர், உப தலைவரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து தலைமையில் நடைபெற்றது.
வாக்குகள்
இதன்போது சுயேட்சைக் குழு 01 சார்பில் போட்டியிட்டு நாவலப்பிட்டி நகரசபைக்குத் தெரிவாகியிருந்த முன்னாள் தவிசாளர் அமல் பிரியங்கர, 09 வாக்குகளைப் பெற்று மீண்டும் தவிசாளராகத் தெரிவாகியுள்ளார்.

சுயேட்சைக்குழு -02 சார்பில் போட்டியிட்டுத் தெரிவாகிய கருப்பண்ணன் சுரேஸ் உப தவிசாளராக தெரிவானார்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளுக்கு நிறுத்தப்பட்டவர்கள் தலா ஐந்து வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டிருந்தனர்.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri