இரண்டாக உடையும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015 நாடாளுமன்றத் தேர்தலில் 95 ஆசனங்களைப் பெற்றிருந்த சுதந்திரக் கட்சி, 2020 நாடாளுமன்றத் தேர்தலில் 14 ஆசனங்களை மாத்திரமே பெற்றன.
கட்சிக்குள் பிரச்சினை
அவர்களுள் 9 பேர் ரணில் ஜனாதிபதியானதும் ரணிலின் அரசில் இணைந்துகொண்டனர். 5 எம்.பிக்களே எஞ்சியுள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த 5 எம்.பிக்கள் இரண்டாகப் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது என்று உட்கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
மூன்று எம்.பிக்கள் ஒரு பக்கமும், இரண்டு எம்.பிக்கள் இன்னொரு பக்கமும் செல்வதற்கு வாய்ப்புண்டு என்று சொல்லப்படுகின்றது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
