தேசிய சுதந்திர தினத்தை கறுப்பு நாள் என்று சொல்வது துரதிர்ஷ்டவசமே! ரணில்
"இலங்கையில் பிறந்த எந்தக் குடிமகனும், தாய்நாட்டை நேசிக்கும் எந்தப் பிரஜையும் தேசிய சுதந்திர தினத்தை கரிநாள் என்றோ, கறுப்பு நாள் என்றோ சொல்லமாட்டார்கள் எனவும் அப்படியானவர்கள் தேசிய சுதந்திர தின நிகழ்வை வைத்து அரசியல் நடத்தவும் மாட்டார்கள்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கில் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி பேரணிக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர தினத்தை கறுப்பு நாள் என்று சொல்வது துரதிர்ஷ்டவசமே
"இந்த நாட்டில் எதிர்த் தரப்பினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி சிலர் தேசிய சுதந்திர தினத்தை கறுப்பு நாள் என்று சொல்வதும், கரிநாள் என்று கூறுவது துரதிர்ஷ்டவசமே.
அவ்வாறானவர்களின் விமர்சனங்களை ஒரு பக்கத்தில் தூக்கி
வைத்துவிட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க, நாட்டை
நேசிக்கும் அனைத்து உறவுகளும் ஒன்றாகச் சங்கமிக்க வேண்டும்" என்று ரணில்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமடையும் போர்... உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்பிய ட்ரம்ப் News Lankasri
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri