சுதந்திர தினத்திற்கு ஆதரவாக யாழில் பேரணி (Photos)
இன்று யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினத்தை ஆதரித்து அதனைக் கொண்டாகும் முகமான பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். பொது அமைப்புகளின் பிரதிநிதி அருண் சித்தார்த் தலைமையில் இடம்பெற்ற பேரணியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மக்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் தேசியக் கொடிகளைத் தாங்கியவாறு யாழ்.பண்ணை கடற்கரை பகுதியில் இருந்து யாழ். நகரை சுற்றி வலம் வந்திருந்தார்கள்.


மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்
இதன்போது 13ஆம் திருத்தச் சட்டம் ஒரு தீர்வல்ல என்றும் அரசியல்வாதிகள்
தொடர்ந்து மக்களை ஏமாற்றி சர்வாதிகார ரீதியான கறுப்புக்கொடி சுதந்திர
போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அரசியல்வாதிகள் தமது சுயலாபத்திற்காக இவ்வாறான செயற்பாடுகள் ஈடுபட்டு வருவதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri