மழையினால் பாதிக்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் போட்டி: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியானது மழை காரணமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இன்று (10.09.2023) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கில் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தனர்.
ரிசர்வ் டே
24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 147 ஓட்டங்கள் குவித்து இருந்தது.
ரோஹித் சர்மா 49 பந்துகளில் 56 ரன்களும், சுப்மன் கில் 52 பந்துகளில் 58 ரன்களும் குவித்து ஆட்டமிழந்ததோடு விராட் கோலி, ராகுல் களத்தில் இருந்தனர்.
இதன்போது போட்டி மழையால் இடைநிறுத்தப்பட்டதால் ரிசர்வ் டேவான (Reserve day) நாளை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.