டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் 9 தடவையாக நிகழ்ந்த சம்பவம்
டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் 9 தடவையாக முதல் இன்னிங்ஸ் மொத்த சம ஓட்ட எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இது நிகழ்ந்துள்ளது.
387 ஓட்டங்கள்
இதன்படி, இரண்டு அணிகளும் தமது முதல் இன்னிங்ஸில் ஒரு எண்ணிக்கையிலான ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தன.
இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 387 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய, இந்திய அணியும் 387 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
இந்தநிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி நேற்றைய மூன்றாம் நாள் நிறைவின்போது விக்கட் இழப்பின்றி 2 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நான்காவது நாள் ஆட்டம் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





