இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியடைந்த பங்களாதேஷ்
2023 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண லீக் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பங்களாதேஷ் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் நாணய சுழற்சியில் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஷகில் அல் ஹசன் 80 ரன்களும், ஹிர்தாய் 54 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்பின் 266 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. முதல் ஓவரின் 2வது பந்திலேயே ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேற, தொடர்ந்து வந்த திலக் வர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் 17 ரன்களுக்கு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னரும் இந்திய அணி 37.4 ஓவர்களில் 170 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் அக்சர் படேலை எதிர்முனையில் வைத்துக் கொண்டு சுப்மன் கில் அதிரடிக்கு திரும்பினார்.
சிக்சரும் பவுண்டரியுமாய் விளாசிய அவர், 117 பந்துகளில் தனது 5வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
இறுதிக்கட்டத்தில் பரபரப்பு
இந்த சூழலில் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்த சுப்மன் கில் 133 பந்துகளில் 121 ரன்களில் எடுத்து ஆட்டமிழக்க, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் கடைசி ஓவரில் இந்திய அணி 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது.

அந்த ஓவரின் 4வது பந்தில் ஷமி ஒரு பவுண்டரி, 5வது பந்தில் ரன் அவுட்டானார். இறுதியாக இந்திய அணி 49.5 ஓவர்களுக்கு 259 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் காரணமாக வங்கதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது.
இந்திய அணி ஆசிய கோப்பை சுற்றின் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றதால் பங்களாதேஷ் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri