உலக கிண்ண கிரிக்கெட் தொடர்: பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
புதிய இணைப்பு
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டன் தாஸ் அதிகபடியாக 66 ஓட்டங்களையும், தன்சித் ஹசன் 51 ஓட்டங்களையும் மஹ்முதுல்லாஹ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்திய அணி
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி, 257 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 41.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 103 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அணித்தலைவர் ரோஹித் சர்மா 48 ஓட்டங்களையும் சுப்மன் கில் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிதி ஹசன் 2 விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டார்.
முதலாம் இணைப்பு
பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கான உலக கிண்ண தொடர் போட்டியில் இந்திய அணிக்கு 257 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி இந்தியா- புனேவிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதலில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
சிறப்பான பந்துவீச்சு
துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை லிட்டன் தாஸ் பெற்றதுடன் தன்சித் ஹசன் 51 ஓட்டங்களையும் மஹ்முதுல்லாஹ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதனையடுத்து பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்படி, இந்தியா அணிக்கு 257 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.