பள்ளத்திற்குள் விழுந்த பேருந்து: ஒருவர் உயிரிழப்பு - 18 பேர் வைத்தியசாலையில்
நாரம்மல - தம்பலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (19.10.2023) பகலளவில் இடம்பெற்றுள்ளது.
அலவ்வையிலிருந்து நாரம்மல நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்து தம்பலஸ்ஸ என்ற இடத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்துள்ளது.

18 பேர் வைத்தியசாலையில்
காயமடைந்தவர்களில் 7 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும், 11 பேர் நாரம்மல வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் 51 வயதான நபரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
you may like this video
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri