உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்தியாவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு
அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சை தெரிவுசெய்திருந்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 469 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக அவுஸ்திரேலிய அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டனர்.
மாபெரும் இலக்கு
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி தொடக்கத்தில் சற்று பின்வாங்கியது. இந்நிலையில் இந்திய அணிக்கு 444 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 270 ஓட்டங்களை பெற்றிருந்த வேலை(270/8d) ஆட்டத்தை இடைநிறுத்தி கொண்டது.
இதனைத்தொடர்ந்து தனது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு 444 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |