ராமர் பாலத்தை புராதன சின்னமாக்க கோரி வழக்கு தாக்கல்: இந்திய உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்துள்ள ராமர் பாலத்தை பார்த்து வணங்கும் வகையில் சுவர் எழுப்ப வேண்டும் என கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை இந்திய உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இன்று தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையே கடலில் சுண்ணாம்பு பாறை திட்டுகள் ஒரே தொடர்ச்சியாக அமையப்பெற்றுள்ளன.
இதனை புராண இதிகாசங்களுடன் தொடர்புபடுத்தி பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இராமரால் இலங்கைக்கு கட்டப்பட்ட பாலம் என கூறப்படுகிறது.
சேதுக் கால்வாய் திட்டம்
இதன் காரணமாக இதனை ராமர் பாலம் அல்லது ராம் சேது என அழைக்கின்றனர்.
அறிவியப்பூர்வமாக இது நிரூபிக்கப்படாத நிலையில் சேதுக் கால்வாய் திட்டத்துக்காக இந்த பகுதியை ஆழப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது இராமர் பாலம் சேதமடைந்துவிடும் என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த சர்ச்சையின் போதுதான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்காக கருணாநிதி தொடர்பில் இந்து சாமியார் ஒருவர் தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஐ.நாவில் இடம்பிடித்த நீதிபதி இளஞ்செழியன்: பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம்(Video)
தள்ளுபடி செய்யப்பட்ட மனு
பின்னர் இராமர் பாலம் இருப்பதை காரணம் காட்டியே சேதுக்கால்வாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டு கைவிடப்பட்டது.
இந்நிலையில் இராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக பாரதீய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பலர் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து அண்மைக்காலத்தில், இந்து சட்ட ஆணையம் சார்பில் அசோக் பாண்டே என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், இராமர் பாலத்தை பொதுமக்கள் வணங்கும் வகையில் சுவர் கட்டித்தர உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர்கள், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் தலையிடுவது எல்லாம் நீதிமன்றத்தின் பணியா? என கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக மத்திய அரசை அணுகலாம் எனவும் மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதியரசர்கள், குறித்த பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 9 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
