காலிஸ்தான் குழுக்களை தடை செய்த கனடா: இந்தியாவுடன் தொடரும் முறுகல் நிலை
கனடாவில் இரண்டு காலிஸ்தான் குழுக்களை அந்நாட்டு அரசாங்கம் தடை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் பாபர் குர்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு ஆகிய இரண்டு காலிஸ்தான் அமைப்புகளே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.
எனினும், ஐந்து காலிஸ்தான் குழுக்களையும் தடை செய்ய வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது வருகிறது.
தூதரக உறவுகளில் பாரிய விரிசல்
உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, கனடா, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பாவில் சுமார் 11 காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கமைய ஜூன் 18ஆம் திகதி காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பிறகு, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தூதரக உறவுகளில் பாரிய விரிசல் ஏற்படத்தொடங்கியது.
இந்நிலையில், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர பிரச்சினைகளை இரு தரப்பினரும் இணைந்து தீர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று தெரிவித்திருந்தார்.
எனினும், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறை மீதான கனேடிய அரசின் அணுகுமுறையே முக்கியப் பிரச்சினை என்று ஜெய்சங்கர் ஊடக சந்திப்பில் விமர்சித்திருந்தார்.