இந்தியா, பாகிஸ்தான் போட்டிக்கு பாதிப்பு
புதிய இணைப்பு
இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி தற்போது பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததை தொடர்ந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
இந்நிலையில் 4.2 ஓவர்கள் நிறைவில் 15 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
கண்டி - பல்லேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் இன்றைய(02.09.2023) போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியல்
இதற்கமைய, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து நான்காம் இடத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
? Toss & Team Update ?
— BCCI (@BCCI) September 2, 2023
Captain @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bat against Pakistan. #INDvPAK
A look at our Playing XI ?
Follow the match ▶️ https://t.co/hPVV0wT83S#AsiaCup2023 pic.twitter.com/onUyEVBwvA
ICYMI: Our team for today ??#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/FvghdjbQY4
— Pakistan Cricket (@TheRealPCB) September 2, 2023