உலகளாவிய ரீதியில் கோவிட் வைரஸின் அபாயம் அதிகரிப்பு
உலகளாவிய ரீதியில் கோவிட் வைரஸின் அபாயம் அதிகரித்துள்ளதால், அது இலங்கை நாட்டையும் பாதிக்கும் என தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சமித்த கினிகே கூறியுள்ளார்.
மேலும் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று கோவிட் வைரஸ் தொடர்பான, தகவல்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உலகளவில் கோவிட் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி
உலகளாவிய நிலைமையைப் போலவே, இலங்கையிலும் எண்ணிக்கையில் குறைவு உள்ளது. கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களில், தினமும் 20க்கும் குறைவான தொற்றுக்களே பதிவாகியுள்ளன.
எனினும் , உலகளாவிய ரீதியில் அல்லது உள்நாட்டில் தொற்று நிலைமை நிரந்தரமாக அகற்றப்பட்டுவிட்டதாக மக்கள் மனநிறைவு கொள்ள வேண்டாம் என்று கினிகே கேட்டுக்கொண்டார்.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடுதல் மிகவும் உதவிகரமாக இருப்பதாக
அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தொற்று மோசமடைவதைத் தடுக்க மக்கள் தங்கள்
தடுப்பூசிகளை விரைவாகப் பெறுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
