இலங்கையில் டெங்கு மீண்டும் தாண்டவம்! - நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதுவரையில் 58 வைத்திய அதிகாரி பிரிவுகள், அதிக ஆபத்தான வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வருடத்தில் 72 ஆயிரத்து 903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது

கடந்த வருடத்தில், இந்தக் காலப்பகுதியில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், இந்த வருடத்தில் 40 ஆயிரத்து 998 நோயாளிகள் அதிகமாகப் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் 14 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது எனத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவுகளில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மக்களைக் கோரியுள்ளது.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam