பெரியகல்லாறில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Independent Writer
in மருத்துவம்Report this article
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறில் இன்றைய தினம் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 22ஆம் திகதி இருவர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தி தொடர்ச்சியான அன்டிஜன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் பெரியகல்லாறு கலைமகள் வீதி தனிமைப்படுத்தப்பட்டு அங்குள்ளவர்களுக்கு தொடர்ச்சியான அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று மாலை கலைமகள் வீதியில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 47 பேர் அன்டிஜன் சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் உட்பட ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவியொருவர் தொற்றுக்குள்ளானதையடுத்து, அவருடன் பழகிய மேலும் சில மாணவிகள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் பெரியகல்லாறு பகுதியில் 97 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பெரியகல்லாறு உட்பட அதனை அண்டியுள்ள பிரதேச மக்கள் தேவையற்ற வகையில் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
