சுவிற்சர்லாந்தில் அதிகரித்துவரும் நோய் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

K. S. Raj
in சுவிட்சர்லாந்துReport this article
சுவிற்சர்லாந்தில்(Switzerland) மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகரித்துவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்த ஆண்டில் மாத்திரம் இதுவரையான காலப்பகுதியில் 87 பேருக்கு குறித்த நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு
ஆனால், அந்நாட்டு பெடரல் அதிகாரிகளோ, வெளிநாடுகளுக்குச் சென்ற சுவிஸ் நாட்டவர்கள் அங்கிருந்து இந்த தொற்றை நாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகள் பலவற்றில் இந்த நோய்தாக்கம் பரவிவருகின்ற நிலையில் இந்த ஆண்டில் மண்ணன் தொற்று அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டில், மண்ணன் தொற்று காரணமாக 136,000 உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு கூறுவதோடு, உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
