இலங்கையில் அதிகரித்து வரும் நீரில் மூழ்கும் மரணங்கள்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
இலங்கையில் நீர் சார்ந்த விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் ரெிவித்துள்ளனர்.
இதனைக் கட்டுப்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி
இதன்படி 2024 ஆம் ஆண்டு 595 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,2025 ஆம் ஆண்டு 388 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸ் கடல்சார் பிரிவு 2025 இல் 151 உள்ளூர்வாசிகளையும் 96 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் உயிரிழப்பிலிருந்து மீட்டுள்ளது.
அதேபோல், 2026 இல் இதுவரை 17 உள்ளூர்வாசிகள் மற்றும் 16 வெளிநாட்டவர்கள் ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக, பொலிஸ் கடல்சார் பிரிவு தனது நடவடிக்கைகளை 31 மாவட்டக் காவல் பிரிவுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் 71 உயிர்காப்புப் பிரிவுகள் (Lifeguard units) அமைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான மரணங்கள்
இதற்கென 308 பயிற்சி பெற்ற அர்ப்பணிப்புடன் கூடிய பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விபத்துக்கள் அதிகம் நிகழக்கூடிய அபாயகரமான நீர்நிலைகள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

இதற்கமைய அபாயகரமான நீர்நிலைகளில் குளிப்பதையும் நீந்துவதையும் தவிர்க்குமாறு பொலிஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் மது அல்லது போதைப்பொருள் பாவித்த நிலையில் நீரில் இறங்குவதைத் தவிர்க்கவும்; பெரும்பாலான மரணங்கள் இவ்வாறான நிலையிலேயே பதிவாகியுள்ளன.
நிர்வாக முறை மாற்றப்படாவிட்டால்..என்பிபி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா