யாழில் ஒரு பகுதியில் அதிகரிக்கும் கோவிட் தொற்று : மக்களிடம் முக்கிய வேண்டுகோள்
யாழ். சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 16 நாட்களில் 118 கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை தினமும் 8 - 10 ஆகப் பதிவாகி வருவதாகவும், ஆனால் மக்கள் அதற்கான அறிகுறிகள் தென்படுமாயின் தாங்களாகவே முன்வந்து அன்டிஜன் பரிசோதனைக்கு தம்மை உட்படுத்தி உறுதி செய்து கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்கள் சுகாதார நடைமுறைகளைச் சரியாக பின்பற்றாமையாலேயே இந்த நிலை உருவாகியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் சாவகச்சேரி சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போர் அறிகுறிகள் தென்படுமாயின் தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
