வவுனியா மாவட்டத்தில் அதிகரிக்கும் கோவிட் தொற்று
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 885 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 5 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் மீண்டும் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 30 ஆம் திகதி வரை கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 885 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 5 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தேவையற்ற விதத்தில் வீட்டில் இருந்து வெளியில் வருவதனை இயன்றளவு தவிர்க்கும் போது நோய் பரம்பலை கட்டுப்படுத்த முடியும்.
இதற்கு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri