அதிகரிக்கும் பாடசாலை உபகரணங்களின் விலை! தடுமாறும் மாணவர்கள்
பாடசாலை அப்பியாச கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடதாசி மற்றும் அச்சீட்டு நடவடிக்கைகளுக்கு தேவையான ஏனைய பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக, இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலக சந்தையில் கடதாசிகளின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கடதாசிகளின் விலை அதிகரிப்பு, இலங்கையின் வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகிய காரணங்களினால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2023ம் ஆண்டு கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என கல்வியலாளர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan