கிளிநொச்சியில் அதிகரிக்கும் கொரோனா! - நான்கு நாட்களில் 200 பேருக்கு தொற்று
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் தங்களை பரிசோதனை செய்தவர்களில் 200 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 50 பேர் மாணவர்களாக காணப்படுவதோடு, 16 வயதுக்குட்பட்டவர்கள் 43 பேரும் உள்ளடங்குகின்றனர்.
அத்தோடு இரண்டு கர்ப்பிணித் தாய்மாரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது தொற்று பரவும் வேகம் அதிகமாக
காணப்படுகின்றமையால் பொது மக்கள் கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை
கடைபிடித்து செயற்பட வேண்டும் என்றும், தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி
செலுத்தாதுள்ளவர்கள் அவற்றை தவறாது செலுத்திக்கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam