கனடாவில் அதிகரித்த பனிப்புயல்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் பனிப்புயல் அதிகரித்துள்ளமை தொடர்பில் சுற்றாடல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் ஒரு சில இடங்களில் இன்று(13.01.2024) பனிப்புயல் நிலைமையை அவதானிக்க முடியும் எனவும் சில இடங்களில் 25 சென்றிமீற்றர் அளவில பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கடுமையான குளிர்
மேலும், இன்று பனிப்புயல் ரொறன்ரோ பெரும்பாகத்தின் சில பகுதிகளை கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன சாரதிகளினால் வாகனங்களை செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பனிப்புயல் வீசும் சமயங்களில் பயணங்களை வரையறுத்துக் கொள்வது அவசியமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு கடுமையான குளிர் நிலவும் எனவும் மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |