கொரோனா பரவல் உணரும் வகையில் அதிகரிப்பு: மருத்துவர் அன்வர் ஹம்தானி
நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மருத்துவமனை கட்டமைப்புகள் உணரும் வகையில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொழிநுட்ப சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி (Dr.Anwar hamdani) தெரிவித்துள்ளார்.
இந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது 5 முதல்7 வீதம் என தெரிவித்துள்ள அவர், இந்த நிலைமையானது மிக துரிதமான பாரிய அதிகரிப்பை நோக்கி செல்ல முடியும் எனவும் கூறியுள்ளார்.
கடந்த வார இறுதி விடுமுறை மற்றும் விடுமுறை தினங்களில் மக்கள் செயற்பட்ட விதத்தில் இந்த பாதிப்பான பிரதிபலன் கிடைத்துள்ளது.
இதன் உண்மையான பிரதிபலனை இன்னும் ஓரிரு வாரங்கள் செல்லும். மக்களின் இயல்பு வாழ்க்கையை கொண்டு நடத்தவே நாடு திறக்கப்பட்டதே அன்றி வினோத பயணங்கள் செல்வதற்கு அல்ல.
சுகாதார சட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். அவ்வாறு செயற்படவில்லை என்றால், கொரோனா பரவல் அதிகரித்து, கல்வி, பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளும் வீழ்ச்சியடையலாம்.
வைரஸ் பரவல் நிலைமைக்கு அமைய எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் துறைகளை மாத்திரம் எதிர்காலத்தில் மூட நேரிடும் எனவும் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri