அம்பாறையில் அதிகரித்துள்ள கடல் கொந்தளிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை
அம்பாறை மாவட்டத்தில் நீண்ட தொடர் கோடை வெப்பத்தின் பின்னர் திடீர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் குறித்த மழை காரணமாக மரங்கள் உடைந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை ,நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை, மல்வத்தை போன்ற பிரதேசங்களும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள சில வீட்டுத்திட்டங்களும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவுறுத்தல்
மேலும், மேற்குறித்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் கடும் காற்று அழுத்தத்தால் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டதுடன், மின்னல் வெட்டினால் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் திடீர் கனமழையால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தினசரி பயணிக்கும் வீதிகள் பலவும் நீரில் மூழ்கி வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக வீதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பிரதான வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய நிலை உருவாகி வருகின்றது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri