சுரேஷ் சலேவின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்! தினமும் சந்திக்க அனுமதி கோரும் சட்டத்தரணி
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை தினந்தோறும் சந்திப்பது தனது தொழில்கடமை என்பதால் அதற்கு வாய்ப்பளிக்குமாறு அவரது சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுரேஷ் சலே சார்பில் அவரது வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணி அசித் சிரிவர்த்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
சாகும் வரை உண்ணாவிரதம்
சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ள தனது கட்சிக்காரரின் நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பதும், அதுகுறித்த தகவல்களை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதும், அவரது உரிமைகளையும் நலனையும் உறுதி செய்வதும் தனது தொழில்முறைப் பொறுப்பு என்றும் சட்டத்தரணி அசித் சிரிவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தனது கட்சிக்காரருடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பது அவசியம் என்றும் சுட்டிக்காட்டும் அசித் சிரிவர்த்தன, அதற்காக அவரை தினமும் சந்திக்க அனுமதிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri